Friday, July 3, 2009

கவிதைகள்....


புள்ளிப் புள்ளியாய் உன்
குறும்புகளை என் இதயத்தில்
வைத்துப்பார்கிறேனே

ஒவ்வொன்றும் சேர்ந்து
உன் அழகுக்கோலமாய்
காட்சி தந்து என் கனவை
கலைக்கிறதே பார்

குழந்தையின் புன்னகையையே
முகமாக்கி வைத்திருக்கும்
உன் அழகில் என்னையே நான்
மறக்கிறேனே பார்

மலையில் விழுந்த
மழைத்துளி நான்
காதல் நதியில்
எப்படி கரைந்தேனோ

உந்தன் கரைசேர
ஒடி வருகிறேனே
பார்

ம்ம்ம்
இதுமட்டுமா…

கல்லூரித் தேர்வுக்காய் நான்
படிக்க முயற்சித்தால் உந்தன்
பெயரை எழுதி ரசிக்கிறேன்

விடியவிடிய உன்னோடு நடந்து
திரிந்த பாதைகள் எங்கும் உந்தன்
கால்தடங்கள் தேடித் திரிகிறேன்

கைபிடித்தவாறு வீதியில் காதலர்கள்
கடந்து சென்றால் உந்தன் கைவிரல்களின்
தாளம் நினைத்து மனதுக்குள் சிரிப்பேன்

இப்படி
எத்தனை எத்தனை உன்னைக்
காதல் கொண்ட நாள் முதல்

காதலின் சுகத்தில்
தினமாயிரம்
முறை புதிதாய்
பிறக்கிறேன் நான்
ஒவ்வொரு எழுத்தாய் உந்தன்
பெயரை எழுதிப் பார்க்கிறேன்
பிடித்த முதல் கவிதையாய்
தெரிவதென்ன என் காதலனே

அழகுச் சித்திரத்தின் உன் முகம்
என்றும் மறையாமல் எந்தன்
இதயத்தில் வரையபட்டிருக்கிறதே
இதுவென்ன என் ஓவியனே

கரை சேர துடிக்கும் அலையப்போல
என் மனம் உனைச் சேர பாய்வதென்ன
என் பாவலனே

என்னை மறந்து நான்
தனிமையில் சிரிப்பதென்ன

தனித்துவமாய் ஏதேதோ
சிந்திப்பதென்ன

காகித பக்கங்கள் எங்கும்
கவிதை என்ற பெயரில் நான்
கிறுக்குவதென்ன என் கவிஞனே

உன் நினைவுகளில் என்னைத்
தொலைத்து உன்னைத்தேடி தினம்
தவிக்கிறேனே

இது என்ன என்
இனியவனே இதுதான்
காதலா..?

இதைத்தான் காதல்
என்பார்களா..?

உன்னைக் காதலித்ததில்
இருந்து புதிய தனி உலகத்தில்
வாழ்வதாய் உணர்கிறேன் நான்

புதுப் புதிதாய் இன்பம்
புரியாத சோகமயம்

கதை பேசிக்கொள்ளும்
கண்கள் கண்டால் காணமல்
போகும் மனசு

பிரிகின்ற போது
இமை நனைக்கும்
கண்ணீர்

பிரியாமல் கூடவரும்
உன் நினைவு

கனவு காண்கையிலும்
உன் இதயம் சுமக்கும்
உணர்வு

எப்போதும்
என் தனிமையில்
துணையாகும் உன் மனது

படிக்கின்ற வேளையில்
பாடமாக
உந்தன் குறும்புகள்

ம்ம்ம்

முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்

இது மட்டுமா
அடிக்கடி உன்னைத் தேடிப் பார்க்கும்
கண்கள் தொலைவினில் நீ என்பதை
மறந்து என்னை ஏங்கவைக்கும்

இதயம் துடிக்கும் போதெல்லாம்
உந்தன் பெயரே ஒலிக்கும் காதோரம்

காதலனே காதலனே
கவிதையால் இணைந்தோம்
காலமெல்லாம் சேர்ந்து வாழ

இனி ஒரு பிரிவு வேண்டாம்
இமைப்பொழுதில் வந்துவிடு

உயிராக உனைச் சேர வரம் தந்து
உன்னோடு எனை வாழ வை

புதுப் புது இன்பம் புரியாத சோகம்
கதை பேசும் கண்கள் தலையாட்டி சரி சொல்லுதே……………..!

~~

சோகங்கள் என்னை தாக்கிய போதும்
தலை சாய உந்தன் தோள் கேக்கிதே…………………!

~~

பிரிகின்ற போதும் பிரியாத நினைவு
கண்களின் ஓரம் கண்ணீரும் கரை சேருதே……………….!

~~

கனவிலும் உன்னை சுமக்கின்ற இதயம்
கலங்கின்ற போதும் மனம் கலங்காமல் துணையாகுதே……………..!

~~

படிக்கின்ற போதும் புரியாத பாடம் – அதில்
புரிகின்ற பாடமாய் உன் நினைவு – என்னை
குளப்பத்தான் நினைக்கின்றதே……………………………..!

~~

நீ நின்ற இடத்தில் தினம் நான் நின்று
செல்கிறேன் – நிற்கின்ற ஒரு நொடியில் – கண்களில்
பரவசம்- காரணம் நீ வருவாயோ என்ற எதிர்பார்ப்போடு………………!

~~

புன்னகையால் உன் முகம் பூத்திருக்க
கையிலே றோஜா மலர்ந்திருக்க – காதலன்
நீ எனக்காக காத்திருந்த அந்த நொடி- நெஞ்யின்
ஓரன் இடைவிடாது இசைக்கின்றதே…………………………………!

~~

தொலைவாக நீயும் நினைவாக நானும்
மலர்கின்ற காதல் மனதிலே மலர
இதயத்தில் உன் பெயரும் ஓயாமல் இசைத்துவர
மறுபடியும் ஒரு பிரிவு வேண்டாம் என்று
காதலனே நீ வரம் கொடுத்து சென்றுவிடு…………………!

~~காதலே உன்னை வலை
போட்டு தேடியதில்லை…
சுவாச காற்ரிலும் உன்
பெயர் சொல்லியதில்லை…
உணர்வில் கூட காதல்
எண்ணம் இருந்ததில்லை…
காதல் கொள்ள இதுவரை
ஆசை மனதில் வந்ததில்லை…………………..!
~~~~


புதுசாக பூத்த காதல் – அதிசயமாய்
என்னை மாத்தியபோதும் – மனதிலே
கோலங்கள் அளியாமல் உன் முகம்
அதிலே தெரியிதடா………………………………………!
~~~~

புதுதாக என் மனதில் நீ பிறந்தாய்
அன்று காதல் பூவை என்னில் மலரவைத்து
எண்ணங்கள் அத்தனையும் உனக்காக மாற்றிவிட்டு
உன் காதலியாய் என்னை உருமாற்றி செல்கிறாய்………………………….!
~~~~

இதமான மலர்க்கூட்டம் இணையக் கேட்டேன்
வெக்கத்தில் என் முகன் சிவக்க கேட்டேன்
வீசும் காற்றில் அவன் சுவாசம்
என்னை தளுவி செல்ல வேண்டும்
இதயங்கள் இரண்டும் இணையத்தான்
எண்ணங்கள் ஒவ்வொன்றும்
ஒன்றாக வேன்டும் என்றேன்…………………………..!
~~~~

இதயத் துடிப்பும் இன்று – காதல்
துடிப்பாய் மாறத்தான் – காதலன்
உன் பெயரை இதயம்
மறக்காமல் சொல்லுதடா……………………!
~~~~

தனிமையில் தவிக்க வைக்கும் காதல்
மனதை சிறையில் அடைத்து விட்டு
தனித்துவமாய் என்னை சிந்திக்க வைக்கிதடா………………..!
~~~~

நட்சத்திரம் பூத்திருந்தாலும்
நிலாவிற்கே மதிப்பதிகம் – எத்தனை
உறவுகள் என் எதிரில் வந்தாலும்
காதலன் உனக்கே அன்பதிகம்………………………..!
~~~~

ஒளி தரும் நிலவு
பக்கத்தில் இல்லை என்று
கவலைப்பட்டால் கிடைப்பதில்லை
காதலன் நீ இல்லை என்று
மனம் வருந்தினால் போதும்
மனதிலே நினைவாகவோ
நேரிலே நிஐமாகவோ
என் எதிரே வருகிறாய்…………………………….!
~~~~

எத்தனை உறவுகள் எனக்கிருந்தும்
இன்று உயிர் தேடும் உறவாக
உன்னைத் தேடுகிறேன்………………………!
~~~~

வெக்கத்தில் முகம் சிவக்க
கோபத்தில் வாய் அசைக்க
புன்னகையால் பூப் பூக்க
பார்வையால் மனம் பறிக்க
பார்த்துத்தான் சிரிக்கிறாய்……………………!

~~~

இதயங்கள் படபடக்க
இம்சைகள் நீயும் செய்ய
இனிக்கின்ற வார்த்தைகள்
காதோரம் இசை பாட
ஆசைகள் அத்தனையும்
மனதோடு அலைபாய
கதலனே நீ
கண்ணடித்து செல்கிறாய்…………………..!

~~~

சில்லென்று தென்றல்
தித்திக்கும் கனவு
இளமையின் ஆசை
இதமான உணர்வு
கதலனே உன்னை
இமைக்காமல் கண்கள்
விழித்திருந்து தேடுதடா………………..!

~~~

உன் மடியில் நான் உறங்க
உயிர் தரும் கவிதை
அதை நீ படித்து நான் கேட்க
முகில்கள் ஒவ்வொன்றும்
மோதித்தான் மழைத்துளியை
பரிசாக அளிக்கிதடா…………………………..!

~~~

தூக்கத்தில் கனவு
விளிக்கையில் நினைவு
கனவில் உன் முகம்
நினைவில் தினம் தோன்ற
நித்திரையை கெடுக்கத்தான்
யன்னலோரம் நிலாவாக
நீ வந்து பார்க்கிறாய்………………………..!

~~~

உயிரிலே உன் முகம்
உணர்விலே உன் நினைவு
உதடுகள் அசைகின்றன – ஆனால்
சொல்வதெல்லாம் உன் பெயரே………………………..!

~~~


முதலில் உன்னைத்தான்
கண்கள் பார்க்கத்தான்
காதல் கொள்ளத்தான்
இதயம் கேட்டது…………………!

~~

இமைகள் ஒவ்வொன்றும்
இமைக்க மறுக்கத்தான்
கண்கள் இரன்டுமே
காதல் கொண்டது……………………….!

~~

தூங்கும் போதிலும்
கனவில் உன் முகம்
இம்சை செய்வதால்
தினமும் கனவிலே
உன்னைக் கேட்கிறேன்…………………….!

~~

யாரோ யார் யாரோ
பேசி சென்றாலும்
உந்தன் குரல் போலே
என்னில் கேட்கிது………………………!

~~

முதலில் உன்னைத்தான்
நெஞ்யில் யாசித்தேன்
சுவாச காற்றும் தான்
ஒன்றாய் கலந்தது…………………!

~~

உன் நிழலாய் நானும் தான்
உன்னோடு வாழத்தான்
நிழலாய் உன்னோடு
நானும் வந்தேனே………………….!

~~

இதய கோவிலில்
நினைவாய் உன்னைத்தான்
பூக்கள் தூவினேன்
நினைவாய் நீயும் தான்
என்னில் வாழ கேட்கிறேன்………………….!

~~

சிந்தனை ஒவ்வொன்றும்
சிதறும் நீராக
மனதில் சிதறத்தான்
நினைவாய் நீயும் தான்
என்னில் மலர்கிறாய்…………………………!

~~

சிரிக்கும் போதெல்லாம்
உந்தன் பூ முகம்
மனதில் தோண்றத்தான்
தினமும் சிரித்து தான்
உன்னை காண்கிறேன்……………………….!

~~

காலம் ஒவ்வொன்றும்
கடந்து சென்றாலும்
ஆயுள் தான் தீர்ந்து போனாலும்
நமது காதல் தீராது…………………..!

~~

காதல் வயசிது ஏதோ நினைக்கிது
இதயம் ஏங்குது உன் முகம் பார்ப்பதற்காய்……………!

~~

கண்கள் பேசிது …கவிதை தோண்றுது
பிரிவின் வேதனை என்னை ஏங்க வைக்கிது………………..!

~~

பூப்போல் உன் முகம் என்னில் மலருது
இதள்கள் ஒவ்வொன்றும் முத்தம் கேட்கிது…………………..!

~~

துளி துளியக உன் நினைவு மனதை
தொட்டு தொட்டு செல்லுது – வீசும்
தென்றலோ நித்திரையை கெடுக்கிது
உன்னை நினைக்க தான் சொல்லி விட்டு செல்லிது…………………!

~~

காதல் கோலங்கள் கால்கள் போடுது
கதை பேச கைகள் உன்னை தான் அளைக்கிது…………………!

~~

தனிமை பிடிகிது நினைவுகள் மலர்வதால்
நித்தமும் தனிமை வேண்டுமென கேக்கிது……………………!

~~

இரவுகள் கூட நீ இன்றி கசக்கிது
திரும்பும் போதெல்லாம் உன் முகம் தெரியிது……………………!

~~

இதய கதவு திறந்து தான் கிடக்கிது
உன் ஒவ்வொரு கவியும் அதிலே பதியிது………………………..!

~~

நித்தமும் உன் முகம் பார்க்க தான் துடிக்கிது
முடியாத போதும் கண் மூடி உன் முகம்
என்னுள்ளே தேடுகிறேன்…………………………………..!

~~

பாட புத்தகம் கவிதையாய் தெரியிது
படிக்கும் போதெல்லாம் கவிதைகள் தோன்றுது……………..!

~~

என் ரோஐ இதள் மீது பனித்துளியாய்
உன் நினைவு பரவசமாய் என் கண்கள்
பார்த்து விட துடிகிறது………………………………………….!

~~

விண்மீன் கூட்டங்கள் ஒளிகள் வீசிது
நிலவாய் என்னைத்தான் நிக்க வைத்து பாக்கிது……………..!

~~

மேகக்கூட்டங்கள் என்னை தீண்டுது
தீண்டும் போதெல்லாம் உன் நினைவால்
புது கவி தோன்றுது…………………………………………………..!

~~

பட்டாம் பூச்சிகள் என் கையில் பறக்கிது
உலகம் கூட தான் எனக்கென தெரியிது…………………..!

~~

இதயம் இரண்டும் தான் ஒன்றாய் நினைக்கிது
மரணம் கூட ஒன்றாக வேண்டும் என்று கேக்கிது………………!

~~நம் நாட்டு விடிவிற்காய்
காத்திருந்து காத்திருந்து கண்கள்
ரெண்டும் சிவந்தாச்சு………………………!

~~

தென்றல் தவழ்ந்த தேசத்தில்
சுகந்திரம் வேண்டும் என்று
பெருமூச்சும் விட்டாச்சு…………………..!

~~

எத்தனை நாள் சொந்த மண்ணில்
அடிமைகளாய் பயந்து பயந்து
வாழ்வதென்று – பத்து மாதம்
சுமந்த மகளை போர்க்களம்
அனுப்புகிறாள் ஓர் அன்னை……………………….!

~~

மஞ்சள் நிலவு போல் மண்ணிலே
உதிர்ந்தவள் – இன்று புதைகுளியில்
கண்மூடி கிடக்கிறாள்………………………….!

~~

எத்தனையோ இன்பங்கள் நம்மை
தீண்டுகின்றன – சோகம் என்ற
வாழ்க்கை மட்டும் நம்மை
விட்டு செல்லவில்லை…………………………….!

~~

பள்ளிக்கு சென்ற பிள்ளை வருவாளா
தெரியவில்லை – அன்னை தான் கண்ணீரால்
அர்ச்சனை செய்கிறாள்…………………………!

~~

நாளை உயிரோடு இருப்போமா
தெரியவில்லை - இன்று கூட
நின்மதியாய் வாழ வளி இங்கில்லை………………….!

~~

நினைவிலும் நித்தமும் வாடிடும்
என் முகம் – நம் நாட்டு விடுதலைக்காய்
ஏங்கிடும் என் மனம்………………………………..!

~~

உயிரோடு கொல்கின்ற வாழ்க்கை இங்கே
உணர்வுகளை சுட்டெரிக்கும் நிலமை இங்கே
வாழ்ப்பிறந்தவர்கள் இன்று போர்க்களத்தில்
போரிட்டு உயிர்மடிந்து போகின்ற காலம் இது……………….!

~~

நம் நாட்டில் நின்மதியாய் வாழ்வதெப்போது….?
நம் கனவுகள் எல்லாம் நிஐமாவதெப்போது…?

~~

சுகந்திரம் என்ற சொல்லை கேட்பதற்காய்
இன்றும் கண்ணீரோடு காத்திருக்கிறோம்…………………………….!

~~

-

கனவிலும் கண்ணோரம் உன்னை வைத்து
இமைக்காமல் காத்திருப்பேன்…………..!!

**

நீ தூங்கும் வேளையிலும் தாயாக
தாலாட்டு நான் பாட கண்ணே நீ கண்ணுறங்கு……..!!

**

கருவறையில் உன்னை பத்து
மாதம் சுமக்கவில்லை – இருந்தும்
நீயே என் முதல் குளந்தை……………….!!

**

**

-

மனதோடு கதை பேசும் மெளன
அன்பே நிஐமாக கதை பேச வருவதெப்போது..?

~~

சொந்தம் என்று உனக்கு யாரும்
இல்லை என்று சொன்னாய் – இன்று
என் நினைவால் உன் மனம் கரைவது எப்படி…?

~~

என் நெற்றி பொட்டு வெண்நிலா
உன்னை காணும் போதெல்லாம்
ஒளி தர நினைபது எப்படி….?

~~

கண்கள் பேசும் வார்த்தை – அது
உனக்கு புரிவது எப்போது…….?

~~

கண்ணாடியில் என் முகம் நீயாக
தெரிவதெப்படி………………….?

~~

கண் உறங்கும் போதிலும் பக்கத்தில்
உன் முகம் புன்னகைப்பது எப்படி……?

~~

இவை யாவும் உன் கதலியாய்
நான் ஆனதாலா………..?

~~
கனவுகள் உன்னாலே நிறைவேற
வேண்டும் எண்றேன் – உன்
பெயர் சொல்கின்ற இதயமும்
வேண்டும் என்றேன்……………………!

~~

காற்றாக நான் மாறி உன்
சுவாசத்தில் கலக்க வேண்டும்
நீ இன்றி போனாலும் இவ்
உலகம் எனக்கு இருட்டாக
வேண்டும் என்றேன்………………………….!

~~

உன் குரல் தினமும் கேட்க
வேண்டும் என்கிறேன் – அன்பே
உன் குரல் கெட்டால் என்னோடு நீ
இருப்பதாக ஓர் உணர்வு………………….!

~~

பொய்யை கூட அழகான
உண்மை போல் சொல்லுகிறாய் – நீ
சொல்லும் பொய் கூடா
நிஐம் என்று நம்புகிறேன் நான்……………………..!

~~

உந்தன் நினைவுகள் என்னை
மோதும் போது பேச்சு
கூட வரவில்லை – மெளனித்து
நிற்கிறேன் அப்போது நானே
உன்னை தீண்டுகிறேன் என்று
ஒரு வார்த்தை சொல்லிவிடு…………………..!

~~உனக்கென இங்கு பிறந்தவளும் நானே
உன் அன்பு சோலையிலே – வாழ
வந்த தேவதையும் நானே………………..!

~~

என் இமைகள் கூட – இமைக்க
மறுத்திடலாம் – ஆனால்
உன்னை நினைக்காமல் இருந்தால்
என் இதயம் கூட என்னை திட்டுதடா……………..!

~~

பூக்கள் கூட வாசம் தர
மறுத்திடலாம் - அன்பலே
ஒன்றான நம் சுவாச காற்று பிடிகிறது……………!

~~

எதேதோ சொல்கிறாய் புரியவில்லை
இருந்தும் தலையாட்டி சிரிக்கிறேன்
உன் பேச்சை கேட்டபதற்காய்……………….!

~~

கதலனே எனக்காக எப்படியோ
மாறிவிட்டாய் – இன்று
எனக்காக மட்டுமே நீ………………….!

~~

பகலில் கூட கனவு காண
வைத்தாய் – இன்று என்
கற்பனை உலகம் கூட உன்னை தேடுதடா………….!

~~

அன்பு சோலையிலே உன்னை
அரவணைத்து மகிழ்கிறேன் -இதைத்தவிர
தருவதற்கு என் உயிரை இன்றி
எதுகுமில்லை………………………………!

~~

அன்பே ஒரு முறையாவது
உன் சுவாச காற்றில் – என்
யீவன் வாழ வேண்டும் – உயிர்
இன்றி போனாலும் என் நினைவு
உன்னை வாழ்த்த வேண்டும்……………………….!

~~பத்து மாதம் கருவறையில்
பத்திரமாய் நான் இருக்க – என்
முகம் பார்ப்பதற்காய் பாவி – நீ
துடி துடிச்சாய்…………………..!

~~

பூமிக்கு வந்த பின்னும்
அன்பாலே அரவனைத்து
ஆசையாய் பல கதைகள்
நீயும் தான் பேசிடுவாய்………………!

~~

பள்ளிக்கு செல்கையிலும் – கை
பிடித்து செல்கிறாய் – புரியாத
பாடத்தையும் புரியும்படி எனக்கு
எடுத்து சொன்னவள் நீ…………………..!

~~

பாரீட்சை எண்று – கண்
விளித்து நான் படித்தால்
பக்கத்தில் உதவியாக நீ இருப்பாய்……………!

~~

சின்னஞ் சிறு குழந்தை முதல்
பெரியவளாய் ஆகும் வரை என்னோடு
துணையாக நீ இருந்தாய்………………..!

~~

தந்தை இல்லா ஊரில் – தாயோடு
நான் இருந்தேன் – அண்று
துணையாக நீ வந்தாய்
கண் உறங்கும் வேளையிலும்
பக்கத்தில் நீ………………….!

~~

நாடு விட்டு நாடு வந்தும்
உன் நினைவு அளியவில்லை
உறங்குகின்ற போதிலும் – கண்களில்
கண்ணீர் – காரணம் உன் பிரிவால்………………!

~~

உன்னைப்போல் நானும் படித்து
விட ஆசை கொன்டேன் -இன்று
என்னை விட்டு சென்று விட்டாய்
என் ஆசை கூட உன்னை தேடுதடி…………………!

~~

கஸ்ரம் என்று உன் அன்னை
உன்னை படிக்க வைக்க மறந்ததில்லை
இன்று உன் அன்னையின் கனவு கூட
மண்ணாகி விட்டதடி……………………………!

~~

அன்பாலே உன்னை அரவனைத்த
உன் அன்னை இன்று கண்ணீரால்
உன்னை யாசிக்கின்றாள்…………….!

~~

உன் படிப்பிற்காய் எத்தனையோ
கஸ்ரம் ஒண்றாக தாங்கியவள்
உன் அன்னை – இன்று அத்தனையும்
நினைத்து தான் உன் அன்னை ஏங்குகிறாள்………….!

~~

எத்தனை கஸ்ரம் அத்தனையும்
சுமந்தாலும் – இன்று மகள்
கூட சென்றுவிட்டால் – உன்
அன்னை மனம் தாங்கல்லம்மா……………………..!

~~

உனக்காக உன் தந்தை
எப்படியோ மாறிவிட்டார் – இன்று
நீ இல்லா இவ் உலகில்
வாழ்ந்திடத்தான் பிடித்திடுமா……………………?

~~

உன் மனம் வாடினாலே
உன் தங்கை அழுகிறாள்
இன்று நீ இல்லா இவ் உலகில்
எப்படித்தான் வாழ்ந்திடுவாள்………………………?

~~

வயதிலே சின்னவள் தான் உன்
தங்கை – இன்று மனதாலே
சோகங்கள் அவள் மனதை தாக்கிதடி………………..!

~~

அக்கா என்று சொல்லி விட
உன்னை விட யாருமில்லை – ஒரு
அக்காவாய் இன்று அவள் கண்ணீர்
துடைக்க பக்கத்தில் நான் இல்லை……………………!

~~

உன்னைப் பார்த்து எத்தனையோ
ஆண்டுகள் இருந்தும் – இறுதியில்
கூட உன் முகம் காண – என்
கண்களுக்கு வரம் இல்லை………………………….!

~~

போராளியாய் நீ மண்ணில்
போரிட்ட போதிலும் – அன்பான
உன் உள்ளத்தில் எங்கள் நினைவுகள்
அளிந்திருக்க முடியாது…………………………………….!

~~

போராளியாய் நீ வீரமரணம்
கொண்டது மகிழ்ச்சிதான் – ஆனால்
இவ் உலகை விட்டு சென்று விட்டாய்
என்று நினைக்கையிலே
உள்ளம் கூட நடுங்கிதடி……………………………………!

~~

உன்னை நான் இளப்பேன் என்று
கனவில் கூட நினைக்கவில்லை – இன்று
என் கையால் உன் படத்திற்கு
மாலை இட வைத்து விட்டாய்……………………………..!

~~

எத்தனையோ சொந்தங்கள் – இன்று
உன் நினைவால் ஏங்குதடி – நீ
ஒருமுறையாவது கண்
திறந்து பார்த்துவிடு………………………………………!

~~

சொந்தங்கள் அத்தனையும் – ஒன்றாக
அழுகின்றன – பாவி நான் தனிமையிலே
பரிதவித்து நிற்கிறேன்………………………………………!

~~

உன் அன்னை உன்னை கெஞ்சித்தான்
கேட்கிறாள் அவள் அழு குரல்
உன் காதில் கேட்டவில்லையா………………….?

~~

தனியாக எல்லோரையும்
தவிக்க விட்டு செல்கிறாய் – விளியோரம்
கண்ணீரை தந்து விட்டு போகிறாய்………………….!

~~

தோழியே உன்னை தேடுகிறேன்
உன் தோள் சாய்ந்து உறங்குவதற்காய்…………….!

~~

கனவிலாவது என்னோடு – ஒரு
நிமிடம் பேசிவிடு – உன்
திருமுகத்தை ஒரு முறை – என்
கண்ணில் வைத்து விடு…………………………………..!

~~

விளியோரம் வருகின்ற கண்ணீரை
உன் கையால் துடைத்து விடு
உன் நினைவாக நான் இருப்பேன் என்று
சொல்லி விட்டு சென்று விடு…………………………!

~~

தோழியே இன்று கவிதை
ஒன்று உனக்காக – இக்கவியை
யார் தீண்டி பார்த்தாலும் – உன்
நினைவை உணர்த்துமடி………………………………….!

~~


கவிதையை ரசித்த எனக்கு
கவிதை எழுத ஆசை வரவில்லை
உன்னை காணும் வரை…………………….!

*~*

கவிதை எழுத ஆர்வம்
தந்தவனும் நீயே – இன்று
கவிதை எழுத வைத்த
கவிஞனும் நீயே………………………!

~*~

நான் சொன்ன முதல் கவிதை
உன் கையால் எழுதப்பட்ட போதும்
எப்போதெல்லாம் அக் கவியை பார்கிறேனோ
அப்போதெல்லாம் உன் நினைவு
என்னை தீன்டுதடா……………………..!

~*~

நீ கவிஞனா தெரியவில்லை……?
ஆனால் என் கண்களுக்கு
நீ எப்போதும் கவிஞனே…………………..!

~*~

எத்தனையோ உதவிகள்
எனக்காக நீ செய்த போதும்
நன்றி என்று சொல்கிறேன் – ஆனால்
நன்றி என்ற ஒரு வார்த்தை கூட
போதாது உன் அன்பிற்கு………………………!

~*~

உதவி என்று கேட்டால்
அஞ்சாமல் செய்கிறாய் – எப்போதும்
உன் வாழ்வில் வசந்தம் வீச
நான் கடவுளிடம் வரம் கேட்பேன்…………………!

~*~

நீ எழுதும் கவிதை எல்லாம்
அழகு என்றேன் – இல்லை பொய்
என்று நீ சொன்னாய்…………………………………!

~*~

பொய்யாக நான் உன் கவியை
அழகு என்று சொல்லவில்லை – நீ
எழுதும் ஒவ்வொரு கவிதைக்கும்
எத்தனையோ அர்த்தம் – அதனாலே உன்
கவிதையை அழகு என்று சொல்கிறேன்…………………!

~*~

நான் எழுதும் என் கவிகள்
அழகாக தெரியவில்லை எனக்கு
அதை நீ படித்து நான் கேட்கும்
போது தான் அர்த்தமே புரிகிறது…………………….!

~*~

நான் வாழ்ந்தால் போதும் என்று
நினைக்கும் இவ் உலகில் மற்றவர்கழும்
வாழ வேண்டும் என்று நினைப்பவன் நீ
எப்போதும் நீ வாழ்க வளமுடன்…………………………!

~*~

நலமாக நீ வாழ – ஒரு
நண்பியாய் இன்று நான் உன்னை
வாழ்த்துகிறேன்…………………………………………………!

~*~நினைவாக வந்தவனே – இன்று
நிஐமாக வந்துவிடு – உயிரொடு
என்னை ஒன்றாக கலந்துவிடு………………!

~

ஆசையில் கண்கள் தேடுவதும்
உன்னையே – அடங்காமல் என்
மனம் அலை பாயிதிங்கே………………!

~

கோபத்திலும் அழகுதான்
உன் புன்னகை – சோகத்திலும்
இன்பம் தரும் உன் பேச்சு………………….!

~

நிலாவாக உன் முகம் – வந்து
வந்து போகையிலும் – நிலையாக
உன் நினைவு என் மனதில் நிக்கிதடா………………!

~

பூ கூட உயிர் என்று – அதை
பறிக்க மறுக்கிறாய் – அந்த பூ
கூட நன்றி என்ற சொல்லாக
புன்னகை தூவுதடா…………………….!

~

மழை கூட உன் காலடியில்
கவிதை சொல்ல நினைக்குமடா
காதலனே உன் அன்பான பேச்சாலே……………….!

~

காலையில் தினமும் கடவுளை
கேட்கிறேன் – காதலன் உன்னோடு
சண்டை போட வேண்டாம் என்று……………..!

~
என்னைக் கண்டால் கை
காட்டாதே என்கிறேன் – அம்மா
பக்கதில் நிற்கும் போதும் கை
காட்டுகிறாயே – அதனால் நான்
தப்பு தப்பாய் என்னென்னவோ
பேசி திட்டு வாங்கியது தெரியுமா……….!

~

என் வீட்டு வாசலிலே – எனக்காக
நீ காத்திருந்த போது – அம்மவிடம்
பொய் சொல்லி உன்னை
பாக்க வந்தது தெரியுமா………….!

~

வீதியில் செல்கிறேன் – என்
கை பிடிகிறாய் வேண்டாம்
என்கிறேன் யாரவது பார்த்து
விடுவார்களோ என்ற பயத்தில்……………………..!

~

துப்பட்டாவால் முகத்தை
மூடுகிறேன் தட்டி தட்டி விடுகிறாய்………………!

~

சத்தம் போட்டு பேசவில்லை
குரல் கேட்டு விடுமோ என்ற பயதில் – நீ
என்னை கத்தி கத்தி கூபிடுகிறாய்…………!

~

பாவி என்னை காட்டியா கொடுக்க போகிறாய்……………!

~

கண்கள் உன்னை காணும் வரை
என் இதயம் காதல் என்ற
சொல்லை நினைக்கவில்லை………………!

~

இன்று உன்னை பார்த்த கண்கள்
காதல் என்ற சொல்லை நினைவூட்டி
செல்கிறது…………………………….!

~

பூட்டி வைத்த மனதில்
புதிதாக நீ பிறந்தாய் – உன்னைப்போல்
எவரும் என் மனதை கவரவில்லை…………….!

~

உன்னைக் கண்ட மனசு இன்று – வேறு
எவரையும் நினைக்க வெறுகிறது……………..!

~

உன் நினைவால் என் உள்ளம் பட்டாம்
பூச்சி போல தான் பறக்கிறது……………….!

~உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு
வார்த்தைகளும் இனிக்கின்றது…………………….!

*

என் கொலுசின் ஓசை கூட
உன் பெயரை என் காதில் சொல்கின்றது…………….!

*

என் உயிரும் – உன் நினைவும்
என் உயிரோடு நீதான் எண்று சொல்கின்றது………..!

*

உன்னோடு நான் பேசும் வார்த்தைகளே
இண்று கவிதையாகி – என்
முன் நிற்கின்றது…………………………….!

*

என் உள்ளம் அதிலே உன்
நினைவு மலர்கிண்றது – உனக்காக
என் உயிரை இடம் மாற்ர கேட்கின்றது………………!

*
காதல் என்னும் உலகிலே
உள்ளம் இரண்டும் ஒண்றாகும்…
கண்கள் கூட கவி பாடும்………………!

~

நினைவு கூட ஒன்றாகும்
கண்கள் கூட உன்னை தேடும்
வீசும் காற்றும் நம் காதில்
காதல் சொல்லும்………………………..!

~

காதல் என்ற சொல்லிலே
மெளனம் கூட வார்த்தை ஆகும்
வார்த்தை கூட கவிதை ஆகும்………….!

~

உன்னை காணா விடில் – பசி
கூட எடுக்கவில்லை – தூக்கம்
கூட பிடிக்கவில்லை…………………..!

~

உன்னை காணாத நேரத்தில்
கண் மூடுகிறேன் கனவிலாவது
உன் முகம் தெரிய……………………..!

~

இன்பமோ – துன்பமோ
காதலில் ஒண்று தான் – இருதயம்
கூட ஒன்றாக அடிக்கின்றது…………………!

~

கண்ணுக்கு துணையாக – இமைபோல
நமக்கு துணையாக காதலே
வருகின்றது………………………………..!

~இதயம் என்னும் பேனாவால்
இன்று எழுதிகிறேன் ஓர் கடிதம்
என் உயிர் காதலனுக்கு……………………..!

*

எழுதுகின்ற வார்த்தகள் கூட
கவிதையாய் என் முன் தோன்றுதடா
உன் பெயரை எழுதிய பின்
வேறு எப்படி இருக்கும்………………………..!

*

என் மடலில் உயிர் உள்ள எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
உயிர் விட கேட்குமடா…………………..!

*

என் உணர்வுகள் ஒவ்வொண்றும்
வார்த்தகளால் எழுதிகின்றேன்
பார்த்தவுடன் கிளிக்கதே
பார்த்துவிட்டு கிளித்துவிடு………………!

*

உன்மீது காதல் கொண்டது நானில்லை
நீ என்மீது கொண்ட காதல்
உண்மையென நம்பியது என் மனம்……………!

*

இன்றும் பொய்யாகவில்லை உன்
காதல் – என் தாய் தந்தைக்காய்
என்னை விட்டு செல்கிறாய்………………!

*

என்னை வெறுத்து நீ செல்லவில்லை
என் உயிரை உன்னோடு
எடுத்தே செல்கிறாய்…………………….!

*

இன்று நீ எப்படியோ தெரியாது
ஆனால் என் மனம் உன்னை
நினைக்காமல் இங்கில்லை…………………..!

*

காலம் தான் பிரித்தாலும் – கடவுள்
கூட கண் திறந்து பார்க்கவில்லை
நம் காதலுக்காய் வரம் கூட தடவில்லை……………..!

*உன்னோடு வாழத்தான்
என் ஜீவன் உன்னை கேட்குதா – உன்
சுவாச காற்றை தேடித்தான் – என்
சுவாசம் அலைகின்றதா………………………….!

*

புயலாக சோகம் என்னை
தாக்கிய போதும் – நீ
தாயாக என்னை தாங்குகிறாய்……………………..!

*

தாய் மடி போல் உன் மடியில்
உறங்கி விட கேட்கிறேன்
காதலனே கொஞ்சம் – என்
உணர்வோடு கலந்து விடு……………………..!

*

மனதோடு உன் நினைவு
மலர்கின்றது – மணம் வீசி தான்
என்னை மயக்கின்றது……………………!

*

காதல் என்ற சோலையிலே
எனக்காக பிறந்தவனே – என்
உயிரை உனக்காக எழுதி விட்டேன் – இனி
நீ இன்றி போனாலும் என் உயிர்
என்னை விட்டு போகுமடா………………………!

*

நெற்றியிலே பொட்டு ஒட்டுவது போல்
உன் நினைவு என் மனதில் ஒட்டுகின்றது
களட்டி விட மனம் இல்லை
நெற்றி பொட்டும் உன் நினைவை தருகின்றது…………….!

*

வானத்தை பர்த்து நடக்கின்றேன்
நட்சத்திரம் என் பின்னால் வருவது போல்
உன் நினைவும் என்னோடு வருகின்றது…………………….!
என் வீட்டு யன்னல்களை திறந்து
வைக்கின்றேன் – தெண்றல் உள்ளே
வருவது போல் – உன் மூச்சு காற்றும்
தெண்றலோடு சேர்ந்து
என் வீடு வருவதற்காய்………………………..!
என் வீட்டு ரோஐக்கு உன் பெயரை
சொல்லிக் கொடுக்கிறேன் – நீ
வலம் வரும் போது என்னிடம் சொல்வதற்கு…………….!
அதிகாலை வேளையிலும் – உன்
குரல் கேட்பதற்காய் – என்
வீட்டு தொலைபேசியை யாருக்கும்
தெரியாமல் என் அறையில் வைக்கிறேன்…………………!
உனக்காக என் வீட்டிலே எத்தனை பொய்….?


கவிதை என்று நான் கேட்டால்
என் பெயரை சொல்லுகின்றாய்
கற்றோடு சேர்ந்து என்னை
தீண்டி விட்டு போகின்றாய்…………….!

*

காதலனே இன்று தாயாக
தாலாட்டும் படுகின்றாய்
நின்மதியாய் நான் உறங்க
மனதோரம் புன்னகையை வைக்கின்றாய்………..!

*

புது மலராய் என்னை இன்று
பூக்க வைத்து பார்க்கிறாய்
வெட்கம் என்னும் தீயை மூட்டி
அதை பார்த்து தான் ரசிக்கின்றாய்…………!

*

கனவுக்குள் வந்து – எனக்கு
இம்சைகள் தருகிறாய்
செல்லமாய் என்னோடு
சண்டையும் செய்கின்றாய்……………….!

*

சின்ன சின்ன குறும்பு செய்து
சிரிக்க வைத்து என்னை
பல கதை பேச வைப்பாய்………….!

*

கோபமாய் என்னோடு
பேசிடத்தான் நினைப்பாய்
என் மனம் நோகுமென்று
அமைதியாய் போகின்றாய்………………!

*

-


பாவாடை தாவணியில்
பார்த்து விட ஆசை என்றாய்
என் கூந்தலிலே பூ சூடி
பார்த்துவிட கனவு என்றாய்………..!

*

என் கொலுசின் இசையிலே
தூங்கி விட ஆசை என்றாய்
காதோரம் கதைபேச
கனவாக வா என்றாய்……………….!

*

நெற்றியிலே பொட்டு வைத்து
அழகு பார்க்க வேண்டும் என்றாய்
வீதியிலே கை கோர்த்து
நடந்து செல்ல நீ கேட்டாய்……………….!

*

என் கையால் உணவு உண்ண
ஆசை என்றாய்
எப்போதும் என் அன்பால்
உயிர் வாழ வெண்டும் என்றாய்…………..!

*

ஒன்றாக கடவுளிடம் வரம்
கேட்க வேண்டும் என்றாய்
புன்னகையால் என் முகத்தை
பூக்க வைக்க வேண்டும் என்றாய்………………!

*

உன் வீட்டு வாசலிலே
தேவதையாய் வா என்றாய்
நீ கேட்கும் வரம் எல்லாம்
உனக்காக தா என்றாய்…………………!

* * *


என் காதலன் உனக்காக
உன் வீட்டு வாசலிலே
தேவதையாய் நான் வருவேன்………………!
மின்னலாய் உன் முகம்- என்
மனதில் கண் அடித்து
செல்லுதடா…………………!

~

வீசுகின்ற காற்று கூட
உன் முகவரியை சொல்லி
விட்டு போகுதடா…………………!

~

தீயாக உன் நினைவு
என் மனதை சுட்டு விட்டு
செல்லுதடா…………………….!

~

புயலாக என் மனதில்
போராட்டமும் நடக்குதடா………….!

~மனதோரம் உன் நினைவு
மழைத்துளியாய் தூவையிலே
துளித்துளியாய் உன் நினைவு
என் மனதில் உதிருதடா………………!

~

வசந்தங்கள் என் முன்னே
வருகின்ற போதிலும்
வளி வளியாய் என் கண்கள்
உன் முகத்தை தேடுதடா………………!

~


புது புது கவிதையும்
உன்னாலே தோண்றுதடா
கவி கூட உன் பெயரை
சொல்ல சொல்லி கேட்குதடா…………………!

~


துடிக்கின்ற இதயம் கூட
உன் பெயரை சொல்லி சொல்லி
என்னை உயிரோடு கொல்லுதடா…………..!

~

என் வீட்டு கிளி கூட
உன் பெயரை சொல்ல சொல்லி
என்னிடத்தில் கேட்குதடா……………….!

~


தெண்றல் கூட உன் நினைவை
சத்தமின்றி தீண்டி விட்டு
முத்தமிட்டு செல்லுதடா……………………!

~


என் வீட்டு கண்ணாடி உன்
முகத்தை காட்டி காட்டி உன்
கதை பேசி என்னோடு சிரிக்கிதடா…………….!

~


என் வீட்டு தொலைபேசி
உன் குரலில் சத்தமிட்டு
என் மனதை இழுக்கிதடா………………!

~


நீ கொடுத்த றோஜா கூட
உதிர்ந்து விட மனம் இன்றி
உன் நினைவை தீண்டுதடா……………..!

~


உன் நினைவால் விளி ஓரம்
துளி நீரும் வருகின்றது
நீ என்னோடு சேர்வாய் என்ற
நம்பிக்கையில் வரும் நீரும்
உன்னையே கேட்கிதடா………………….!

~


ஐந்து மணி நேரம் எனக்காக நீ
காத்திருந்த போதும்
ஒரு நொடி கூட உன்னோடு
பேசாமல் சென்றேனே – என்னை
எதற்காக நீ காதல் செய்தாய்………..?

**

உன் கண்களில் கண்ணீர் கண்டும்
கலங்காமல் நிண்றேனே – என்
மனதில் இரக்கமில்லை என்று
உனக்கு புரியாதா…………………….?

**

எத்தனை நாள் என்னை
எட்டி எட்டி பார்த்திறுப்பாய்
எத்தனை நாள் என்னோடு
பேசிய்ருப்பாய்………………….!
திருப்பி நான் எதுகுமே
கேக்கவில்லையே – உன்
மனம் என்னை வெறுக்கவில்லையா………..?

**

என்னை காணும் போதெல்லாம்
எட்டி எட்டி பார்த்தாய் – மற்றவர்கள்
கேட்ட கேள்விக்கு – நான்
பதில் சொல்ல தயங்கியது
உனக்கு தெரியுமா…………….!

**

திரும்பி கூட பார்த்ததில்லை
காரணம் – உன்னை பார்ப்பதாக நீ
நினைத்து விடுவாயோ என் று பயம்…………!

**

உன்னை காதலிக்க சொன்னது நானா……?
உன் மனதை மாற்றியது நானா…….?
இன்று உன் சோகத்துக்கு காரணம் தான் நானா…..?

**

வாய் திறந்து உன்னோடு – நான்
ஒரு வார்த்தை பேசியதில்லை
கோபம் வந்தும் உன்மீது – நான்
கோபப்பட்டதில்லை – காரணம்
நான் சொல்லும் வார்த்தைகளை
தாங்கும் சக்தி உன்னிடதில்
இருக்குமா தெரியவில்லை…………….!

**

காதல் பிடிக்காத என்னிடம்
காதல் சொல்லும் உன்னை
வெறுப்பதை தவிர என்ன
செய்ய முடியும்…………………!

**

என்னை காதலித்தது தப்பு
என் று உன்னிடம் சொன்னவர்கள்
யாரும் இல்லை……………………….!
இன்று நீ காணும் சோகம் என்னால்
என்று என்னிடம் சொன்னவர்கள்
எத்தனையோ பேர்……………..!

**

இன்று உன் கெட்ட பளக்கத்தால்
தாய் தந்தை கூட உன்னை
வெறுத்திருக்கலாம் – பாவி
என்று என்னை திட்டியும் இருக்கலாம்……………!

**

நீ செய்த தப்பால் இன்று
நீ காணும் சோகம் – காரணம்
நான் என்று என் மனதை – ஏன்
கொல்லுகிறாய்…………………..!

**

நீ காதலித்தது தப்பில்லை
என்னை காதலித்ததே தப்பு………….!
நீ செய்த தப்பால் பாவி – என்னை
காரணம் காட்டாதே…………….!

**

உயிரின் உயிரே- உன்
காதல் நான் தான்
உனக்கது தெரியாதா………?

*

உள்ளம் கூட – உன்
பெயர் சொல்லுது
உனக்கது கேட்காதா……….?

*

உன்னை கொள்ளை கொண்டவள்
எதிரில் நிக்கிறாள்
முகம் தான் தெரியாதா……….?

*

உன் நினைவால் எங்கும்
என்னை உனக்கு
இதுவரை தெரியாதா…………?

*

உன் நெங்சில் வாழும் ஒரு
ஜீவன் அது நான் தான்
புரியாதா………………?

*

உன் பேச்சை கூட-ரசித்து
சென்றவள் முகவரி தெரியாதா……………?

*

கனவில் கூட காதல்
தந்தவள் – உன் கனவுக்கு
என்னை தெரியல்லையா…………..?

*

சோகத்தை கூட
என் பேச்சால் மறைத்தவள்
என் வார்த்தைகள் புரியல்லையா………….?

*

உன் கண்கள் தேடும்
காதலி நான் தான்
என்னை தெரியாதா – என்
நிலைதான் புரியாதா……………?

*

கடவுள் கூட கண் முன்
தோண்றி – வரம் கேட்டால்
உன்னை காண வரம் கேட்பேன்……

மெளனமே கொல்லாதே நான்
உச்சரிப்பது உன் பெயரையே……………!

~என் மெளனம் பேசும் வார்த்தைகள்
உன் காதில் கேக்கவில்லையா………?
உன் பெயரின் உச்சரிப்பு உனக்கு அது
புரியவில்லையா…………?

~தனிமை கூட வெறுக்கவில்லை - உன்
நினைவு என்னோடு இருப்பதால்……………!

~


நீ எத்தனையோ கவிதைகள்
எனக்கு சொன்னாலும் – உன்
மெளனம் சொல்லும் கவிதையே
எனக்கு அதிகமாக பிடிக்கின்றன……..!

~மெளனமாய் நான் இருந்தால்
அதன் அர்த்தங்கள் உன்னால்
மட்டுமே உணர முடிகிறது……….!
மனதுக்குள் நான் பேசும்
வார்த்தைகள் உன்னைவிட வேறு
யாரால் உணர முடியும்…….?

~உன் பெயரை மனதுக்குள்
உச்சரிக்கிறேன் – பார்ப்பவர்கள்
கேட்பார்கள் ஏன் இந்த மெளனம் என்று….?
நான் உன் பெயரை உச்சரிப்பது
அவர்களுக்கு தெரியவா போகிறது…….?

~அன்பு செல்வம் உன்னை
அள்ளி அணைத்து முத்தமிட
உள்ளம் தான் வெறுக்குமா……….!

~

குழந்தை செல்வம் – இன்று
என் மடியில் புன்னகையால்
சிரிக்கின்றாள்……………….!

~

உன் புன்னகை பூவாலே
என் நெங்சை தாக்குகின்றாய்
உன் அன்பானா பேச்சாலே
உலகையே ஆள்கிறாய்……….!

~

உன் புன்னகைப் பூவாலே
புது கவிதை நான் எழுத
தினம்தோறும் புன்னகை செய்யம்மா
என் மனம் மகிழ……………..!

~

உன் கொள்ளை கொள்ளும் சிரிப்பிலே
விரும்பி மாட்டிக் கொண்டேன் – இனி
உன்னை விட்டு என் மனம்
விலகிச்செல்லாது………………….!

~

உன் சின்ன விரல்கள் தொடத்தான்
நெங்சம் கூட ஏங்கிது………!
மொழி கூட புரியவில்லை
மனதாலே பேசுகிறேன்…………!

~

என் மடியில் நீ இருந்தால்
கள்ளமில்லா உன் உள்ளத்தால்
சோகம் கூட தெரியவில்லை…………!

~

கதை பேசும் உன் உதடுகள்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
பசி கூட எடுக்கவில்லை…………!

~

தூக்கத்திலும் அழகுதான்
உன் புன்னகை – அழுகையிலும்
அழகுதான் உன் கண்கள்………..!

~

நீ பேச வார்த்தைகளாய்
வந்தவளும் நானே – நீ சிரிக்க
வெறுக்காமல் உன்னோடு
சிரித்தவளும் நானே………..!

~

கை பிடித்து உன்னை
நடக்க வைத்தவளும் நானே
கண் மூடி கடவுளை- தொழுகையிலும்
உனக்கு வரம் கேட்டவளும் நானே………..!

~

அன்பு என்னும் பூமியில்- என்னை
ஆளவந்த கடவுளும் நீயே
குழந்தை என்னும் ஆசையை
என் மனதில் தீர்க்க வந்த
செல்வமும் நீயே………………….!

~

அன்பு செல்வம் உன்னை
அன்னை மனம் வெறுக்குமா……….?
அன்னை என்னைப்போல் உன்னை
எவராலும் ரசிக்கதான் முடியுமா…..?

~

உன்னாலே அன்னையாய் – இன்று
நான் கண்ட மகிழ்ச்சி
உயிர் உள்ள காலம் வரை
நெங்சை விட்டு போகாது………..!

~காதலே கை கோர்க்கவா…….!
உன்னோடு உயிர் வாழவா…….!
அன்புக்காய் நான் ஏங்கவா……..!
உன்னையே என் நினைவாக்கவா……..!

*


பட்டாம் பூச்சி போல தான்
உன் நினைவு – என்
நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றன………!
கண்கள் மூடும் போதும்- உன்
முகம் தானே கண்ணுக்குள்ளே
தெரிகின்றது………………………!

*


என் உள்ளம் கூட
ஏங்குதடா உன் அன்புக்காய்…………!
என் உயிர் கூட துடிக்கின்றது
உன்னோடு வாழ்வதற்காய்……..!

*

காதல் வந்த பின்னாடி
பசி கூட எடுக்கவில்லை
தூக்கம் கூட வரவில்லை
தாய் தந்தை பிடிக்கவில்லை
யார் குரலும் கேட்கவில்லை…………..!

*


உன்னை மட்டும் தேடுதடா
என் உள்ளம் -உன்
நினைவு மட்டும் என்
நெஞ்சில் ஓயாமல் அலை பாயுதே……!

*என் கண்ணீர் துளிகள் கூட
எனக்கு கவிதை தர
மறுத்ததில்லை- இருந்தும்
எழுதிய கவிதைகள் கூட
உனக்காகவே……………………..!

*

கவிதை எழுதா விடுல்
தூக்கம் வருவதில்லை – அதிலும்
உன்னை பற்றி எழுதவிடில்
கவிதையே வருவதில்லை………..!

*

என் கவிதையை கண்ணீர் துளி
நனைப்பதால் – என்
கவிதைகள் கூட
சோகம் ஆகிண்றன………………….!

*

சோகமோ சொர்க்கமோ – என்
கவிதைகள் எதை
தரவும் மறுத்ததில்லை – ஏனென்றால்
என் கவிதைகழுக்கும் உயிர் உள்ளன………….!

*

உன் காதலில் எழுதிய கவிதைகள்…………….!
இன்று என் கண்ணீரில் எழுதுகிறேன்…………..!

*

இந்த கண்ணீர் எதர்காக……………….?
என் காதலுக்காகவா……..? இல்லா
என் கவிதைக்காகவா………….?

*

ஒன்றாக பிறந்ததில்லை
ஒரு வீட்டில் வளர்ந்ததில்லை………….!
குரல் கூட கேட்டதில்லை
கோபமாய் பேசியதில்லை…………!
முகம் கூட பார்த்ததில்லை
முகவரியும் கேட்டதில்லை……….!

~


சோகம் என்று தோள்
சாய்ந்ததில்லை-இருந்தும்
சோகத்தை சொல்லாமல் விட்டதில்லை………………..!

~


மனதாலே எப்போதும்
வெறுத்ததில்லை………………!
அன்பானா பேச்சுக்கு
எப்போதும் குறைந்ததில்லை……………..!

~


சொந்த அக்காவா என்று
யார் யாரோ கேட்டபோதும்
மெளனம் கொண்டேன் – இருந்தும்
இல்லை என்று என் மனம் நினைத்ததில்லை………….!

~


ஒன்றாக பேசி ஒன்றாக
சிரித்து மகிழ்ந்ததுண்டு……………….!
சண்டை கூட வந்ததில்லை
நம் அன்பானா பேச்சாலே……………..!

~


பொய்யான வார்த்தைகள்
சொன்னதில்லை……………!
மனதாலே சோகங்கள்
வேண்டாம் என்று………..!

~


தொலை தூரத்தில் இருந்தும்
அன்பாலே தொடர்கிறது நம் உறவு……….!

~


சொந்தமாய் ஓர் அக்கா
எனக்கில்லை- இருந்தும்
நீ வந்தபின் நெஞ்சில்
அந்த கவலை இல்லை………….!

~


மனசாலே உறவான நாம்
காலம் உள்ள காலாம் வரை
பிரியாமல் வாழ
இறைவனை வேண்டுகிறேன்………..!

~
கனவுக்குள் கலந்தபோதும்
உன் திரு முகம் மறையவில்லை……!

*******


உன்னிடம் பொய் சொல்ல
என் உதடுகள் கூட வெறுக்கின்றன
உண்மையில்லா உன் வார்த்தைகளை கேட்டு………….!

*******


உண்மையில்லா உன் வார்த்தைகளால்
என் மனதை குத்துகிறாயே
நான் செய்த பாவம் தான் என்ன………?

*******


உன்னை நேசித்தது பாவமா? இல்லா
உன்னை நம்பியது பவமா…….?

*******


பொய்யாய் கூட உன்னிடம்
நான் பொய் சொன்னதில்லை
என்னிடம் பொய் சொல்ல
உன் உதடுகள் கூசவில்லையா………..?

*******


மெளனமாய் கூட நான்
உன்னை விட்டதில்லை-இன்று
உன் வார்த்தைகளால்
நானே மெளனம் அடைகிறேன்………!

*******


பொய் வார்த்தை என்னும் வில்லால்
என்னை தாக்குகிறாய்…………..!
உடைந்து வீழாமல் என் நெஞ்சம்
பூரித்தா போகுமடா……..?

*******


என் நெஞ்யோரம் சோகத்தை
தந்ததாய் ஓர் நினைவு……!
உன் பொய் வார்த்தையால்
உயிர் போனதாய் ஓர் உணர்வு……..!

*******


அழைக்காமல் வந்து
சோகத்தை தந்தாயே……!
அழுகின்ற விளிகளுக்குள்
அழியாமல் உன் நினைவு மட்டும்……………..!

*******


விளியோரம் துளி நீரும் கரைகின்றது
நீ சொன்ன வார்த்தையை நினைக்கின்றது……….!

*******

காதலே வேண்டாம் என்று
பூட்டி வைத்த என் மனதில்
காதல் செடியை வைத்தாய் இன்று…….!

*

என் ஆசை மன்னவனாய்
என் மனதில் உன்னை வைத்தேன்
என் மனம் உன்னை விரும்புவதால்
நான் கூட என் மனதை
நேசிக்க மறுத்ததில்லை…………!

*

என் இதயம் கூட கேக்கும்
காதல் ஆசை இல்லா உன் மனதில்
காதல் செடியை வைத்தவன் யார் என்று…..?

*

நீ என்னை வெறுத்ததில்லை
நான் கண் கலங்க பார்த்ததில்லை……!

*

தேடி என்னை வந்த போதும்
உன் மனதை நோகடித்து சென்றிருப்பேன்
இரக்கமில்லா பாவி என்று
என்னை நீயும் நினைத்திருப்பாய்………….!

*

எத்தனை நாள் நான்
உன்னை வெறுத்திருப்பேன்……!
வெறுத்தும் கூட
குறையவில்லை உன் அன்பு…………!

*

நீ கேட்ட போதெல்லாம்
காதல் வரவில்லை…….
இன்று காதல் வந்தும்
சொல்ல வழி இல்லை……….!

*
அன்புக்கு இலக்கணமாய்
இருப்பவளே என் அன்னை………..!

~

பத்து மாதம் கருவறையில்
பத்திரமாய் எனை சுமந்தாய்……!
இன்று பூமியிலும் நான் வாழ
என் உடலுக்கு உயிர் கொடுத்தாய்…………!

~

பசி என்று நான் அழுதால்
உணவூட்டி நீ மகிழ்வாய்…………..!
தாலாட்டி உறங்கவைத்து
தமிழ் உணர்வூட்டி வழர்த்தவளே……..!

~

உன் கை பிடித்து
நடக்க வைத்தாய்…….!
அன்பு என்னும் சோலையிலே
ஆழ வந்த றாணி என்றாய்…….!

~

தப்புக்கள் நான் செய்தால்
திட்டி என்னை அடித்ததில்லை………!
பத்திரமாய் எடுத்து சொல்லி
தப்பையும் திருத்திடுவாய்……….!

~

கண் விளித்து நான் படித்தால்
துணையாக நீ இருப்பாய்………!
சோகம் என்று சோர்ந்தாலும்
அன்பாலே அரவணைப்பாய்………..!

~

கேட்டதெல்லாம் மறுத்ததில்லை
இருந்தும் உன் அன்பை தவிர
வேறு எதுவும் தேவையில்லை……..!

~

உந்தன் மடி வேனும் அம்மா
உறங்கி நானும் நாளாச்சு………..!

~

தாய்மை என்னும் உலகில்
தவமாய் கிடைத்த என் தாயே………..!

~


உன் மகளாய் பிறந்து மீண்டும்
உன் மடியில் தவந்து
உண்மையான உன் அன்பில்
வளர நானும் வரம் கேட்பேன்………!

~


என் உயிர் கூட்டில்
உன்னை வைத்து பூயிக்கிறேன்………..!
என் உயிரிலும் மேலாக
உனைத்தானே சுவாசிக்கிறேன்………….!

~

சோகங்கள் தீன்டியபோதும்
நான் கலங்கியதில்லை
துனையாகா நீ இருப்பாய் என்று………….!

~

என் கைகளுக்கு பிடித்ததெல்லாம்- பேனா
என் பேனாக்கு பிடித்ததெல்லாம்
உன் பெயரை எழுதுவதே………….!

~

உன் பெயரை எழுதிக்கொண்டே
போகின்றன என் பேனாக்கள்
அதுகூட கவி தான்
உன்னை நேசித்த எனக்கு……….!

~

நீ கொடுத்த பூவை
வீதியில் போட்டு விட்டு போகிறேன்
பாவி என்னை திட்டாதே……
உன் நினைவை நெஞ்யோடு
எடுத்து தான் செல்கிறேன்…………..!

~என் கவிதைகள் எல்லாம்
ஏக்கத்தொட்டு உன்னை
பார்ப்பது புரிகிறதா……….!

~

காதல் என்னும் பேனாவால்
பாசத்தை நிறைத்து
நான் எழுதிய கவிதைகள்…….!

~

என் இதயத்தி இருக்கும்
உன் நினைவுகளையே
என் கவிதைகள் சொல்கின்றன…..!

~

எத்தனையோ கவிதைகள்
அத்தனையும் என் உயிரில் உறைந்த
உன் நினைவுகள்……….!

~

யாரைப்பார்த்தும் கவிதை
வரவில்லை………..!
உன்னைப் பார்த்த பின் வந்த
கவிதைகளே இவை………..!

~

என் கவியாய் நீ இருக்கும்போது
என்னை விட்டு போவதெப்படி………..!

~

என் இதயத்தில் நட்பு பூவை
பூக்க வைத்த என் உயிர் தோழியே…….!

~

சோகமாய் நான் இருந்தால்
கண் கலங்க மறுத்ததில்லை………!
இன்பமென்று நான் சிரித்தால்
என்னோடு சிரிக்க வெறுத்ததில்லை…………!

~

கோபம் என்று என்னோடு
சோகமாய் இருந்ததில்லை…………!
சண்டை என்று நாம்
பிரிந்ததும் இல்லை……….!

~

கை கோர்த்து நாம் சென்றால்
தங்கை என்று கேட்டவர்களும் உண்டு…………!
நம்மை பார்த்து
பூரித்தவர்களும் உண்டு…………!

~

காதல் கூட சோகம் தரும்
நம் நட்பு நமக்கு சோகம் தந்ததில்லை………!
எத்தனையோ உறவுகள் இருந்தும்
என் மனம் நாடுவது உன்னையே………!

~

உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
அன்பால் நிறைந்த நம் நட்பு
அளியப்போவதில்லை………….!

~

நீ யாரோ நான் யாரோ- இருந்தும்
இன்று நண்பிகள்………….!
அன்பு நிறைந்த எங்கள் இதயத்தில்
நட்பு பூவை பூக்க வைத்த
இறைவனுக்கு எண்றென்றும் நன்றி…….!

~
நான் எழுதும் கவிதைகளே
என்னையுன் கொஞ்சம் நேசியிங்கள்…………!
எழுதுவது என்னை பற்றி இல்லாவிட்டாலும்
எழுதுவது என் கைகளே………….!

*

என் கண்கள் உன்னை பார்த்த பின் தான்
என் கைகள் கவிதை எழுத தொடங்கின………!
என்னோடு கலந்த உன் உயிரும்
உணர்வுமே என் கவிதை………..!

*

என் உள்ளம் உனதானதால்
அதில் தோன்றும் கவிதையும் நீயாகிறாய்……..!
நான் இறந்தாலும் உனக்காக எழுதிய
என் கவிதைகள் என்னை நினைவூட்டும்………..!

*பிரிந்து சென்ற உன்னை
நினைத்து கலங்குவதா…..?
பிரியாத உன் நினைவுகளை
நினைத்து ஏங்குவதா…….?

~

உன் நினைவாலே வாழும் எனக்கு
என் கவிதைகளே
சுவாசம் தந்தன…………..!
உயிரோடு கலந்த என் கவிதைகள்
எண்றென்றும் உன்னை தொடரும்……….!

~

நீ படிக்கும் போது தான் என்
கவிதைக்கே அழகு எண்றேன் – இன்று
என் கவிதைகள் கூட
உனக்காக காத்திருக்கின்றன
நீ வருவாய் என்ற நம்பிக்கையோடு………..!

~
உன் நினைவுகள் என்னை
எதுவரை தொடர்கின்றனவோ
அதுவரை என் கவியும்
உன்னை தொடரும்…………….!

*

உன்னை நினைத்து
பேனா எடுத்த என் கைகள்
என் இறுதி மூச்சு வரை
நிறுத்தப் போவதில்லை………!

*

எனக்கு கவிதை எழுத
கற்றுத்தந்தவன் நீ
என் கவிதைகள் எண்றென்றும்
உனக்காகவே………………!

*

இது காதல் சொல்லும்
கவிதை அல்ல………..!
கவிதை சொல்லும்
காதலும் அல்ல…………..!

*

என்னோடு நடமாடும் உனக்காக
என் இதயம் பேசும்
வார்த்தைகள்………….!

*

உயிர் உள்ள எனது கவிதைகள்
எண்றென்றும் உன்னையே
வலம் வரும்………….!

*
தாயை காணும் வரை
அன்பு இல்லை என்றேன்……..!
பூவை காணும் வரை
வாசம் இல்லை என்றேன்……..!

~

உன்னை காணும் வரை
காதல் இல்லை என்றேன்………..!
உன் கண்கள் காணும் வரை
கனவு இல்லை என்றேன்…………!

~

உன் பேச்சு கேக்கும் வரை
கவிதை இல்லை என்றேன்……..!
இன்று உன் பேச்சே
என் கவிதைகள்………..!

~
கண்ணால் பார்ப்பதெல்லாம்
நமக்கு சொந்தமில்லை………!
நம்மைத் தொடும் காற்றை
நாம் யாரும் பார்த்ததில்லை………….!

~

மனதுக்குள் ஆசை வந்தால்
அளிக்கவும் முடியாது………..!
ஆசை இன்றி வாழ்பவன்
மனிதனும் கிடையாது………!

~

காசு பணம் எப்போதும்
நம்முடன் இருக்காது……….!
பணத்தால் பாசத்தை
வாங்கவும் முடியாது………..!

~

உறவுகள் எப்போதும்
நம்மை விட்டு பிரியாது…………!
பிரிந்தால் பாசம் நம்மை விட்டு
போவதும் கிடையாது………..!

~

உன்னைப் போல் ஒரு உறவை
நான் பார்த்ததும் கிடையாது…………..!
உன்னைவிட என்னை யாரும்
நேசித்தது கிடையாது………….!

~

நான் இன்றி இவ் உலகில்
நீ வாழ முடியாது…………!
வாழ்ந்தாலும் உன் மனதில்
என் நினைவு அழியாது………..!

~

உன் அழகான புன்னகையில்
எத்தனையோ கதை படித்தேன்……….!
கோபமே உன் குணமாய் மாறீ
கோபத்தீ மூட்டிடுவாய்………!

~

குழந்தை எனை எண்ணி
அன்பாக பேசிடுவாய்………..!
பாசமாய் பல கதைகள் கூறீ
என்னையே மகிழ வைப்பாய்……..!

~

உன் கண்ணுக்குள் என்னை வைத்து
இமையாலே குடை பிடித்தாய்……..!
தாயாக நீ மாறீ
தாலாட்டும் பாடிடுவாய்………….!
இன்பமாய் நான் வாழ
இறைவனையும் வேண்டிடுவாய்………!

~

என் உயிருக்குள் கலந்த உறவே
என் மனதில் உன்னையே கடவுளாய் வணங்கிடுவேன்………..!
உன் அன்பாலே நான் வாழ
உன்னிடம் வரமும் கேட்டிடுவேன்………….!

~

என்றென்றும்
நீ வாழ்க வளமுடன்…………!

~
காற்றாக நீ இருந்தால் இசையாக நான் வருவேன்……………..!
பூவாக நீ இருந்தால் தென்றலாய் நான் வருவேன்………….!

~

மழையாக நீ இருந்தால் அதில் நனைய நான் வருவேன்………..!
கடவுளாக நீ இருந்தால் வரம் கேட்டு நான் வருவேன்………..!

~

கண்ணாக நீ இருந்தால் இமையாக நான் வருவேன்………….!
கண்மூடும் நேரத்தில் கனவாக நான் வருவேன்………..!

~

உயிரோடு நீ இருந்தால் உறவாக நான் வருவேன்…………….!
உயிர் இன்றி நீ போனால் உனை தேடி நான் வருவேன்……………!

~
அன்று நாம் பழகிய நாட்கள்………..!
சிரித்து மகிழ்ந்த அந்த நிமிடங்கள்……………!

*

சோகம் என்று தோள் சாய்ந்ததும்
இன்பம் என்று மகிழ்ந்ததும்………….!

*


இன்று ஒவ்வொரு நினைவுகளும்
முள்ளாக குத்துகின்றன……………!

*


பிரிய வேண்டும் என்று தெரிந்திருந்தால்
அன்றே உன்னை விட்டு போயிருப்பேன்…………….!

*உன் நினைவுகள்
என்னை தொடர்வதால்……………!
என் கண்கள்
உன்னை தேடுவதால்……….!
என் உள்ளம்
உன்னையே நினைப்பதால்……….!
உன் மெளனம்
என்னை கொல்வதால்………!

****

நீயே சொல்லிவிடு எதுவரை
வரப்போகின்றன உன் நினைவுகள்….?
அதுவரை காத்திருக்கும்
என் மரணம்…………!.


காதலித்த என்னோடு பேச
மறுத்தாயே எதற்காக………?
மனதில் சோகத்தை சுமையாக
சுமக்க வைத்தது எதற்காக……….?
கண்களில் கண்ணீர் தந்து
கலங்க வைத்தாய் எதற்காக……..?

***

கை பிடிக்க வந்த என்னை
உதறி சென்றாயே எதற்காக………?
உன்னை சுற்றி சுற்றி வந்த என்னை
இன்று வெறுத்தாயே எதற்காக………..?
உன் நினைவுகளை அளிக்க வைத்தாய் எதற்காக…….?
உன்னை காதலித்ததாலா…………?

***

உன்னை சுகம் கேட்டோ – நலம்
நாடியோ இல்லை இக்கடிதம்
இறுதி கடிதத்தில் எதற்க்கு
எதிர்பார்ப்பு……..!

***

நீ கிழித்தது கடிதத்தை அல்ல
என் இதயத்தை………….!
படிக்கா விட்டாலும் கிளிக்காதே
என் உணர்வுகளை…………….!

***

நலம் கேட்கும் என் மடல்கள்-இன்று
நலம் கேட்க மறுக்கின்றன
காரணம் நீ……………!

***

உன் மடல் வரவுக்காய் எதிர்பார்க்கும்
என் கண்கள்-இனி
எதை எதிர்பார்க்க போகின்றன…………?

***

உன் மடலுக்காய் என் வீட்டு வாசலில்
புன்னகையோடு காத்திருந்த என் முகம்
இன்று சோகத்தோடு………!

***

பார்ப்பவர்கள் கூட கேட்பார்கள்
சோகத்தை சொல்லி அளவும் முடியவில்லை……..
சொல்லாமால் பூட்டி வைக்கவும் முடியவில்லை…………..!

***கனவெல்லாம் நீ
கண்கள் திறக்க முடியவில்லை-காரணம்
திறந்தால் மறைந்து விடுவாயோ என்று…………..!

~*~*~*


விடிந்தும் கண்கள் திறக்கவில்லை-காரணம்
கண்ணுக்குள் உன் முகம் தெரிவதால்…………!

~*~*~*


உயிர் உள்ளவரை பிரியாத உன் நினைவுகள்………..!
அழிக்க நினைத்தாலும் அழியாத உன் கனவு……….!
மறைக்க நினைத்தாலும் மறையாத உன் சிரிப்பு…………!

~*~*~*

என் வீட்டு தோட்டத்தில் தெண்றலாய் உன் பேச்சு………..!
என்னோடு உறவாடும் உன் நினைவுகள்…………..!
நித்தமும் உன் முகம் பார்க்க துடிக்கும் என் கண்கள்……..!
உன் நினைவால் வாழும் நான்
உன் உயிர் காதலி……………!

*~*~*~
என் வீட்டு றோஜாக்கள் தினமும்
உன் பெயர் சொல்லி மலர்வது ஏனோ…..?

*~*


என்னை தீண்டும் தென்றலோ
உன் நினைவை தீண்டி விட்டு போவது ஏனோ……..?

*~*

என் வீட்டு கண்ணாடி தினமும்
உன் முகத்தை காட்டுவது ஏனோ………?

*~*

இவையாவும் உன் உயிரின் உணர்வாய்
நான் ஆனதாலா…….?

*~*


காலங்கள் கடக்கின்றன
நான் கொண்ட காதல் மட்டும் உன்னிடத்தில்…………!

~*~

எத்தனையோ கவிதைகள் எழுதிய போதும்
கற்பனைகள் மட்டும் உன்னிடத்தில்…………..!

~*~

கண் மூடி உறங்குகிறேன்
என் கனவு மட்டும் உன்னிடதில்…………..!

~*~


எல்லாம் உன்னிடதில் நான்
இன்று தனிமையில்…………………..!

~*~
நீ எனக்கு இல்லை என்று தெரிந்தும்
உன்னை என்னால் வெறுக்க முடியவில்லை……………..!

*~*

உன்னை நேசித்த குற்ரத்தால்-இன்று
உன்னை திட்ட கூட மனமின்றி தவிக்கிறேன்………….!

*~*

என் மனதில் றோஜாவை வைத்தவனே-இன்று
முட்களையும் வைக்கிறாய்…………………!

*~*

வலி கூட சுகம் தான்
வைத்தது நீ என்றதால்…………….!

*~*

உன்னை திட்ட தெரியாத
என் மனம் சொல்லுவதெல்லம்
நீ வாழ்க வளமுடன் என்றே’……………!

*~*


உன்னை காதல் கொள்ள ஆசை வந்தும்
சொல்லாமல் இருந்தேனே……!
எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லும் என் மனம்
உன்னிடம் மட்டும் சொல்ல மறுக்கிறதே…………….!

*~*

என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயாகா வேண்டும் என்றேன்…………!
என் உள்ளத்தின் உணர்வும்
நீயாகா வேண்டும் என்றேன்…………….!

*~*

என்னை அறியாமல் என் கால்கள்
வருவதெல்லம் உன்னிடமே………..!
என்னை அறியாமல் என் கண்கள்
தேடுவதெல்லாம் உன் முகமே………..!

*~*

இத்தனை ஆசை மொத்தமாய் என்னிடம்-ஏனோ
உன்னிடம் மட்டும் சொல்ல தெரியவில்லை…………!

*~*
நட்பு கடிதம் எழுதிய என்னை
முதல் முதலில் காதல் கடிதம் எழுத
வைத்தவன் நீ………………..!

*~*


காதல் கடிதம் எழுதிய என்னை-இன்று
காதல் கவிதை எழுத வைத்தவனும் நீயே…………!

*~*

நான் பேச நினைப்பதெல்லாம்
எனக்கு முன் நீ பேச வேண்டும்………!

**


என் உள்ளத்தின் எண்ணங்கள்
உன்னிலும் உருவாக வேண்டும்……….!

**


துன்பத்தில் நீ இருந்தால்
கண்ணீர் நான் சிந்த வேன்டும்……..!

**


வேண்டும் வேண்டும் என
யாவும் இனிதே நிறைவேறிட வேண்டும்……………..!

**
முதல் முதலாக என் மனதை
திருடியவன் நீ………………!
என்னை கேட்டா என் மனதை திருடினாய்……?இல்லையே
திருடிய என் மனதை என்கே வைத்தாய்….?
உன் உயிரிலா …? உன் உள்ளத்திலா…..?

~

முதல் முதலாய் என் கண்கள் காண
துடித்தது உன் முகமே……..…!
என் கண்களுக்கு மற்ரவர்களை விட உன்னை மட்டும் பிடிக்கிறதே……..!
ஒரு நாள் உன்னை பார்க்கா விட்டால் என் கண்கள்
கேட்கும் கேள்விக்கு என்ன பதில் நான் சொல்ல……?
உன்னை பார்க்கும் போது தான் என் கண்களுக்கே பரவசம்………!!!!

~

முதல் முதலாய் நீ கொடுத்த முத்தம்……….!
இன்று நினைத்தாலும் இனிக்கும்………..!
நான் கேட்காமலே நீ கொடுத்தாய்-இன்று
கொடுக்கும் நிலையில் நீயும் இல்லை………
வாங்கும் நிலையில் நானும் இல்லை……………!

~

முதல் முதலில் உன்னிடதில் அழுதப்போ……..
அணைத்த உன் கைகள்
என் கண்ணீரை துடைத்த உன் கைகள்………………!
இன்று அணைக்க உன் கைகள்
இல்லை என்று தெரிந்த என் மனம்
இப்போதெல்லாம் அழுவதே இல்லை………….!

~


முதல் முதல் என் கனவில் உன் முகம்
அன்று தான் கனவுக்கான அர்த்தமே புரிந்தது………!
அன்று முதல் கனவு காண நினைத்த என் மனம்………
இன்று முதல் நிருத்தவில்லை……………………………………….!

~


சோகமாய் நான் இருந்தால் பதறுகிறாய்……….!
என் கண்கள் கலங்குவதர்க்குள்….
உன் கண்களில் இருந்து கண்ணீர்………..!

~


என் உயிராய் நீ இருக்கும் போது
எனக்கு என்ன பயம்…………..?
என் ஆசை காதலன் அவன்……………………………!

~

சோகங்கள் வரும் போது ……..
நீயே தோள் கொடுக்கிறாய்……..!
சந்தோசம் வரும் போது ……….
என்னை விட நீயே பூரிக்கிறாய்……………..!

~

வார்த்தைகள் தேவைப்படாமலே….
என் எண்ணங்களை சொல்பவனே………………!
என் பாசை புரிந்தவனே……
உன்னைப்போல் யாருமில்லை………….!
நீயே என் உயிர் காதலன்……………!

~


என்னை கேட்டா உன் கண்கள்
என்னை பார்த்தது….?
என்னை கேட்டா என் கண்கள்
உனக்கு காதல் சொன்னது….?
என்னை கேட்டா என் மனதில்
அன்பை வைத்தாய்…?

~~


என்னை கேட்டா என்
நினைவாய் வந்தாய்,……?
என்னை கேட்டா என் கண்களில் இன்று
கண்ணீரை வைத்தாய்…..?
என்னை கேட்டா இன்று என் மனதில்
சோகத்தை வைத்தாய்………?

~~


இப்போது மட்டும் ஏன் இந்த கேள்வி…….?
இதை மட்டும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா…..?
நீயே என் உயிர் காதலன் என்றால்………
அதுக்கு பதில் உன்னிடமே உண்டு…………..!!!!!!!!

~~கண்ணுக்குள் என்னை வைத்தாய்
உன் கண் இமையாய் நான் வந்தேன்………….!

*~*


மனதுக்குள் என்னை வைத்தாய்
உன் நம்பிக்கையாய் நான் வந்தேன்…………!

*~*


உன் உயிரோடு என்னை கலந்தாய்
உன் நினைவாய் நான் வந்தேன்………….!

*~*


உன் காதலியாய் என்னை நினைத்தாய்
இன்று உன் மனைவியே நான்…………….!

*~*
கல்லறையில் உறங்கும் காதலர்களே……….!
இறப்பது உயிர்களாக இருந்தால்
பிறப்பது நீங்களாகவே இருக்க வேண்டும்……………..!

-


உனக்காக எப்போதும் உயிர் வாழ ஆசை………………!
உன் பெயரை மட்டும் உச்சரிக்க ஆசை………………..!

~~

உன் மடியில் தலை சாய்ந்து உறங்கி விட ஆசை…………!
உனக்காக மட்டும் கவிதை எழுதிட ஆசை………!

~~

உனக்கு பிடித்தவை எல்லாம் உன்க்கும் பிடிக்க ஆசை………!
எப்போதும் உன் காதலியாய் இருந்து விட ஆசை……!

~~

தனிமையில் நீ இருந்தால் நினைவாக நான் வர ஆசை………..!
நினைவாக நீ இருந்தால் நிஜமாக நான் வர ஆசை…………..!

~~

எப்போதும் என் கனவில் நீ வர ஆசை………………….!
கனவில் நடப்பதெல்லாம் நிஜமாக வேண்டும் என்று ஆசை………!

~~

என் மனதுக்குள் உன்னை குடி வைக்க ஆசை……….!
என் உயிரை உன் உயிரில் கலந்து விட ஆசை…………!

~~

உனக்காக என் உயிரை தந்து விட ஆசை………!
உனக்காக ஓர் ஜென்மம் எடுத்து வர ஆசை………..!

~~
என் பெயரை எழுத கேட்டாய் -என்
கைகள் எழுதியது உன் பெயரையே………!
அதை பார்த்து நீ சிரித்தது
நினைவிருக்கிறதா………………..!

*~*

உன் பெயரை எங்கு கேட்டாலும்
எனக்குள் நானே பேசுவதாக ஓர் உணர்ச்சி…………!
பேனா எடுத்ததும் என் கைகள்
முதலில் எழுத துடிப்பது
உன் பெயரையே…………………………!

*~*

முதல் முதலில்
உன் பெயர் பக்கத்தில்
என் பெயர் எழுதி
ரசித்தது நினைவிருக்கிறதா………….!

*~*

உன் பெயர் எழுதிய பிறகுதான்
என் பெயருக்கே அழகு என்று
நீ சொன்னது நினைவிருக்கிறதா……….!

*~*

உன் பெயரை சொல்லாதா
நாளும் இல்லை………..!
உனக்காக வாழாத
வாழ்க்கையும் இல்லை…………..!

*~*
என் ஆசை காதலனே
என்னை விட்டு போகாதே………!

**


உயிரில் கலந்தவனே
என் உயிரை எடுத்து போகதே………!

**


நினைவாக இருந்தவனே -என்
நினைவை கொன்று விட்டு போகதே……….!

**


சொர்க்கத்தை மனதில் வைத்தவனே
சோகத்தை வைத்து விட்டு போகதே………..!

**


அன்பாய் இருந்தவனே-இன்று உன்
அன்புக்கு என்னை அடிமையாக்கி போகதே…………..!

**


உயிடுடன் வந்தவனே
உணராமல் போகாதே……………………………………….!

**

-


கண்ணுக்குள் உன்னை வைத்தேன்…………!
உள்ளத்தில் காதலை வைத்தேன்……..!
கற்பனையில் கவிதையை வைத்தேன்…….!
எல்லாம் எதற்காக….?
என் அன்பு உனக்காக…………!

ஓரே நினைவுடன் இருந்த நாம் – இன்று
ஊயிரோடு இருந்தும் ஒன்றாக இல்லை…..!
நினைவுகள் மட்டுமே மனதில்…..!

~~

உன்னை நான் வெறுத்ததில்லை…..
என்னை நீயும் வெறுத்ததில்லை…..இருந்தும்
காலம் செய்த கோலம் தான் என்ன….?

~~

ஒரு நாள் என்னை காணா விட்டால்….
உன் வீட்டு ரொயாக்கள் கேக்குமே
எங்கே உன் நிலா என்று…?….இன்று
உன் வீட்டு றோஜாக்கள் கேக்க வில்லையா
எங்கே உன் நிலா என்று…?
உன் வீட்டு றோஜாக்கள் -இப்போதெல்லாம்
உன்னைப்போலவே மொளனமா?

~~

உன் கை பிடித்து நடந்த நாட்டகள்-இன்று…
என் கைகளோ தனிமையில்……
போகும் போதெல்லாம் என் கை ரேகைகள்
கேப்பது உன் கைகளையே………!

~~

உன்னைபார்த்து கண் அடித்த என் கண்கள்…..
இன்று கண்ணீருடன்……
இந்த கண்ணீருக்கான காரணம்……….
உன்னை தவிர வேறு யாரால் உணர முடியும்…..?

~~

என் கண்களில் கண்ணீர் தந்தது ….
காதலா? கடவுளா?

~~

கண்ணீர் தந்தது கடவுள் என்றால்-காலம்
தான் பதில் சொல்லும்………..
கண்ணீர் தந்தது காதல் என்றால்-பதில்
உன்னிடமே உண்டு….!

~~

விதி என்று நினைத்து உன்னை
வெறுக்கவும் முடியவில்லை…….…!
காதல் என்று நினைத்து உன்னை
மறக்கவும் முடியவில்லை……….!குனிந்து நடந்த என்னை…..
நிமிர்ந்து நடக்க வைத்தவன் நீ…..! இருந்தும்
நிமிர்ந்து பாக்கும் போதெல்லாம்….


என் கண்கள் தேடுவது உன் முகமே……..!
நீ என்னை பார்க்கும் போது ……
நான் உன்னை பார்த்ததில்லை…..!
நீ என்னை பார்க்காத போதெல்லாம் ……
நான் உன்னை பார்க்க மறந்ததில்லை……..!


காண்பதெல்லாம் கனவெண்றால்
கண்டதெல்லாம் உன் முகமே….**!!

கனவில் கூட உன்னை நான் பிரிந்ததில்லை-ஏனென்றால்
கனவுகள் நிஜமாகும் என்று ஒரு கனவு….**!!
அன்று ஒரு நாள் நீ
சொன்ன வார்த்தை இது


**உயிரோடு இருந்தால்
உனக்கென இருப்பேன்

உயிர் இன்றிப் போனால்
உன் உள்ளத்தில் இருப்பேன்**

உலகமே நான் என நினைக்கும்
உன் மனதில் இன்று நான்

சோகத்தை வைப்பதா…?

சொர்க்கத்தை வைப்பதா….?

2 comments:

  1. உன் கண்கள் அழகுதான்

    ReplyDelete
  2. உன் கண்கள் அழகுதான்

    ReplyDelete