அன்பு நெஞ்சங்களே,
அன்பு நீரைப் போன்றது. நீரை எந்த குவளையில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைப் பெறுவது போல் அன்பும் தாயிடம் பாசமாகவும், மனைவியிடம் காதலாகவும், நண்பனிடம் நட்பாகவும், பிள்ளைகளிடம் கண்டிப்பாகவும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.
நன்நிலத்தில் தூவப்பட்ட விதைகள் பயன் தருவதைப் போல் உங்களால் விதைக்கப்படும் அன்பும் மகிழ்சியான வாழ்வைத் தரும். மகிழ்சியைத் தேடி நாம் ஓடாத இடம் இல்லை. ஒவ்வொருவருக்கும் இது ஒவ்வொரு இடத்தில் கிடைக்கிறது. சிலருக்கு வீட்டில், சிலருக்கு கோவிலில், சிலருக்கு கடற்கரையில், சிலருக்கு கடைகளில்.
கடைகளில் விற்கப்படும் சந்தோசம் (போதை வஸ்துகள், சிகரெட்) சிறிது நாட்களில் நம்மை அடிமைப்படுத்தி சகநண்பர்ககளிடம் இருந்தும், மானுட வாழ்கையிலிருந்தும் நம்மைப் பிரித்து, நம்மை நம்பி இருக்கும் பலரை அனாதையாக்கிவிடும் என்பதை அனைத்து குடிமகனும் நன்கு அறிவார்கள்.
குடிப்பவன் போதையில் உணர்வை இழப்பான், சுயசிந்தனையை இழப்பான். இவர்களுக்கு இழப்புக்கள் மட்டுமே சொந்தமாக இருக்கும்.
நாட்டின் தூண்களாகிய இளைஞர்கள் பலர் இன்று இருட்டறைகளில் புகை மேகத்திற்கு மத்தியில் போதையில் மிதந்து கொண்டிருக்கிறார்களே. ஏன்?
Friday, July 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல சிந்தனை! பூங்கொத்து!
ReplyDelete